விழுப்புரத்தில் நாளை அமித்ஷா தேர்தல் பிரச்சாரம்

dmk bjp aiadmk
By Jon Mar 03, 2021 12:17 PM GMT
Report

விழுப்புரத்தில் நாளை மாலை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார். பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் முருகன் தலைமை வகிக்க உள்ளார். மேலிட பொறுப்பாளர் ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, மாநில பொதுச்செயலாளர் ராகவன், துணைத்தலைவர் நரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.

மாவட்ட தலைவர் கலிவரதன் வரவேற்புரை ஆற்ற இருக்கிறார். இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். பொதுக்கூட்டத்தையொட்டி விழுப்புரம் ஜானகிபுரத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.



Gallery