நள்ளிரவில் பெண் அடித்து கொலை - அதிர்ச்சி சம்பவம்
விழுப்புரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெண் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் காரணை பெரிச்சானூரை சேர்ந்த மாணிக்கம் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி நாராயணன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுஅருந்திய போது, மாணிக்கம் – நாராயணன் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது, அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். இந்த நிலையில், ஆத்திரம் அடங்காத நாராயணன், தனது மனைவி பூங்காவனம், மகன் மணிகண்டன் மற்றும் சகோதரர் முருகன் குடும்பத்தினர் என 6 பேரும், நள்ளிரவில் நாராயணின் வீட்டிற்கு சென்று, அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
கணவர் தாக்கப்படுவதை கண்ட நாராயணனின் மனைவி லட்சுமி அவர்களை தடுக்க முயன்றுள்ளார். அப்போது, அவர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த லட்சுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.