உனக்கு என்ன ரெண்டு புருஷனா? - மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் போக்சோவில் கைது

schoolteacher villupuram sexuallyharassing
By Irumporai Nov 24, 2021 11:58 AM GMT
Report

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நடுக்குப்பம் சுற்றுவட்டார பகுதிக இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கொரோனா தாக்கத்திற்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கன மழையின் காரணமாகவும் புயல் எச்சரிக்கை காரணமாகவும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

 அந்த வகையில் நடுக்குப்பம் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகவும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வரும் பழனிவேல் என்பவர் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகின்றார்.

  பழனிவேல்  பள்ளியில் உள்ள பெண் பிள்ளைகள் நெற்றியில் பொட்டு வைத்து வருவதை பார்த்து பலமுறை இவர் கண்டித்திருக்கிறார்.நீங்கள் எல்லாம் போட்டு வைக்கக்கூடாது என ஆசிரியர் பழனிவேல் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடுக்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பயின்று வரும் ஒரு மாணவி இன்று வீட்டில் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

எதற்காக செல்ல மாட்டாய் என அந்த மாணவியின் பெற்றோர் விசாரித்தனர். உனக்கு ரெண்டு புருஷனா? - மாணவியிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர் து நெற்றியில் இருக்கும் பொட்டை பார்த்து , உனக்கு ஒரு பொட்டு இருந்தால் ஒரு புருஷன் இரண்டு போட்டு வைத்திருக்கிறாய் உனக்கு என்ன இரண்டு புருஷனா என கூறி என்னை உடம்பில் தவறான முறையில் தொட்டாதாக கூறப்படுகிறது.

இதானால் பாதிக்கப்பட்ட மாணவி  பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என கூறி   அழுதுள்ளார். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர்கள் , இந்த சம்பவம் குறித்து புகாராக எழுதி உதவி தலைமையாசிரியர் பழனியினை  பணிநீக்கம் செய்ய வேண்டும் என புகார் அளித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் பழனிவேலை  கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலைய போலீசார்  பபுகாரின் பேரில் உதவி தலைமை ஆசிரியர் பழனிவேலை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.