பிறந்த நாளன்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்- என்ன நடந்தது?
வில்லியனூர் அருகே ஆத்துவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ரகு, ராமு, தமிழ்மணி என்ற 3 மகன்கள் உள்ளனர்.
தமிழ்மணி புதுவை காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் தினமும் தமிழ்மணி புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிக்குச் சென்றுதான் விளையாடுவான். அதுபோல் வீட்டில் விளையாட செல்வதாக கூறிவிட்டு நேற்று வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளான்.
ஆனால் விளையாட செல்லாமல் அரும்பார்த்தபுரம் ரயில்வே பாலத்திற்கு கீழ் சென்றுள்ளான். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி ரயில் ஒன்று வந்தது.
இதை பார்த்த தமிழ்மணி சற்றும் யோசிக்காமல் திடீரென வேகமாக இறங்கி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக் கொண்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் மீது ரயில் ஏறியது.
அதே இடத்தில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனான். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் செய்து அவன் எதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.