பிரபல வில்லு பாட்டு கலைஞர் காலமானர் : சோகத்தில் திரையுலம்

By Irumporai Oct 10, 2022 04:26 AM GMT
Report

பிரபல வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வின் காரணமாக சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

சுப்பு ஆறுமுகம் காலமானார்

 1928 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் சத்திர புது குளத்தில் பிறந்தவர் சுப்பு ஆறுமுகம். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், சுப்பையா பிள்ளை போன்றோரின் குழுவில் இருந்து வில்லுப்பாட்டினை பயின்றவர், வில்லிசை வேந்தர் என்று போற்றப்படும் அளவிற்கு உலகம் முழுவதிலும் வில்லிசை பாடி வந்தார்.

கடந்த 40 வருடங்களாக வில்லிசை பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் பொது இடங்களில் தனது வில்லிசைப் பாட்டினால் மக்களை பெரிதும் கவர்ந்தவர் சுப்பு ஆறுமுகம். மகாபாரதம், ராமாயணம் இதிகாசங்களை வில்லிபாட்டின் மூலமாக மக்களுக்கு வழங்கி வந்தார் சுப்பு ஆறுமுகம்.

பிரபல வில்லு பாட்டு கலைஞர் காலமானர் : சோகத்தில் திரையுலம் | Villisai Vender Subpu Arumugam Passed Away

காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, புத்தர் கதை, திலகர் கதை என்று ஏராளமான வில்லுப்பாட்டுகளை பாடியுள்ளார் சுப்பு ஆறுமுகம். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் 19 திரைப்படங்கள், நடிகர் நாகேஷின் 60 திரைப்படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளில் பங்கேற்று எழுதியுள்ளார் சுப்பு அறிமுகம்.

பிரபலங்கள் அஞ்சலி

1975 ஆம் ஆண்டு கலைமாமணி விருது, ம் சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றவர் சுப்பு ஆறுமுகம். கடந்த 2005 ஆம் ஆண்டில் சுப்பு ஆறுமுகத்திற்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கிய கௌரவித்தது மத்திய அரசு.

பிரபல வில்லு பாட்டு கலைஞர் காலமானர் : சோகத்தில் திரையுலம் | Villisai Vender Subpu Arumugam Passed Away

கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.  இந்த நிலையில் இன்று வயது மூப்பு காரணமாக இன்று காலமானர் அவருக்கு முக்கிய பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.