வழுக்கையை தொடர்ந்து நக சிதைவு - கதறும் 18 கிராமங்கள்
முடி உதிர்வால் அவதிப்பட்டு வந்த கிராமத்தினர் அடுத்த சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
முடி உதிர்வு
மகாராஷ்டிரா, புல்தானா மாவட்டம் 18 கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 279 குடியிருப்பு வாசிகள் கடந்த டிசம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை, திடீரென கடுமையான முடி உதிர்வால் பாதிக்கப்பட்டனர்.
பின் அது ஆரம்பகால அலோபீசியா டோட்டலிஸ் என பின்பு அடையாளம் காணப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், உள்ளூர்வாசிகள் உட்கொள்ளும் கோதுமையில் காணப்பட்ட நச்சுப் பொருட்கள் தான் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்று தெரியவந்தது.
நக சிதைவு
இந்நிலையில், பல மாதங்களுக்குப் பின் அந்த பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள், தங்களது நகங்கள் தற்போது சேதமடைந்து வருவதாக கூறுகின்றனர். சிலருக்கு, நகங்கள் முற்றிலுமாக உதிர்ந்து போயுள்ளன. அவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.
மண், நீர் மற்றும் சில உணவுகளில் காணப்படும் செலினியம் என்ற கனிமத்தின் அளவு அதிகரித்திருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். முன்னதாக முடி உதிர்தலை எதிர்கொண்ட அதே நபர்கள் தற்போது நகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.