உயிரிழந்த குரங்கிற்காக ஒன்றுகூடிய கிராம மக்கள் - மொட்டை அடித்து, கண்ணீருடன் இறுதி சடங்கு - வீடியோ வைரல்

Funeral viral video sad news Village Peoples monkey death
By Nandhini Jan 12, 2022 05:31 AM GMT
Report

மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் தாளுபுரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குரங்கு ஒன்று பொதுமக்களிடம் பாசமாக நடந்து வந்துள்ளது. இந்த குரங்கு அப்பகுதியில் பொது இடங்களில் சுற்றித் திரிந்து வந்துள்ளது.

இந்நிலையில் அந்தக் குரங்கு திடீரென்று உயிரிழந்தது. இறந்து போன குரங்கிற்காக மொத்த கிராம மக்களும் ஒன்று திரண்டு அக்குரங்கிற்கு கண்ணீருடன், இறுதி ஊர்வலம் நடத்தி உள்ளனர்.

குரங்கிற்கு இறுதி ஊர்வலம் நடந்த நிலையில், தாளுபுரா கிராமவாசியான ஹரி சிங் இந்து மத மரபுகளின்படி குரங்கிற்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக மொட்டை அடித்துக்கொண்டுள்ளனர்.

பாசமாக பழகிவந்த குரங்கின் மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குரங்கிறக்காக, அடுத்து கிராம மக்கள் வசூல் செய்து மிகப்பெரிய விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்தனர்.

இந்த விருந்தில் 1500 பேர் கலந்து கொண்டுள்ளனர். பாசத்திற்குரிய குரங்கு உயிரிழந்துவிட்டதாகவும், அதற்காக நடத்தப்படும் விருந்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கிராம மக்கள் நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளனர்.

இது குறித்து வெளியான வீடியோவில், பிரம்மாண்டமாக போடப்பட்ட பந்தலில் மக்கள் அமர்ந்து உணவு உட்கொள்ளும் காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.