தனியொரு ஆளாக வசிக்கும் முதியவர்; ஊரே காலியான சோகம் - பின்னணி என்ன?

Government of Tamil Nadu Sivagangai
By Sumathi Aug 06, 2025 12:04 PM GMT
Report

ஊரே காலியான நிலையின் பின்னணி குறித்து பார்க்கலாம்.

தண்ணீர் தட்டுப்பாடு 

சிவகங்கை-மதுரை நெடுஞ்சாலையில், நாட்டாகுடி கிராமம் அமைந்துள்ளது. ஆனால் இங்கு அத்தனை வீட்டிலும் இப்போது யாரும் வசிக்கவில்லை. ஒரே ஒருமுதியவர் மட்டும் அங்கே வசிக்கிறார்.

தங்கராஜ்

அவர் அங்குள்ள மாரியம்மன்கோயில் பூசாரி தங்கராஜ். இங்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. உப்பாற்றில் ஊற்று பறித்து தண்ணீர் சேமித்தோம். உப்பாற்றில் இருந்து தண்ணீர்வரும் கால்வாயும் தூர்ந்து போனதால், வேளாண்மை பொய்த்து விட்டது.

கடைசி 15 நிமிடத்திற்கு முன்.. வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

கடைசி 15 நிமிடத்திற்கு முன்.. வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

காலியான கிராமம்

எனவே வாழ்வாதாரம் இல்லாததால், மக்கள் அனைவரும் படிப்படியாக வெளியேறியதாக பூசாரி கூறியுள்ளார். ஆனால் அவர் வாழ்ந்த ஊரை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில் ஊரைவிட்டு வெளியேறிய பெண்மணி ஒருவர் கூறுகையில்,

நாட்டாகுடி

“எந்த நம்பிக்கையில் நாங்கள் இங்கே தங்கியிருப்பது? அரசு எங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்க வேண்டும். வெளியேறிச் சென்றவர்களை மீண்டும் வரவழைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கூலித் தொழிலாளி சோனைமுத்து தலை துண்டிக்கப்பட்டு,கொடூரமாக கொல்லப்பட்டது இங்குதான். மேலும் குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காததால் அங்குள்ள இளைஞர்களுக்கு பெண் கிடைக்காத நிலை இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.