கோவிலுக்காக கிராமத்தை தானம்! கல்வெட்டில் கிடைத்த தகவல்

informationfrominscriptions villagedonatedtobuildtemple velloreinscriptions inscriptiontellsatale
By Swetha Subash Feb 21, 2022 01:24 PM GMT
Report

வேலூர் கோட்டையில் உள்ள கோவிலை பராமரிக்க ஒரு கிராமத்தை தானமாக வழங்கிய செய்தி கல்வெட்டின் மூலம் அறியப்பட்டுள்ளது.

வேலுார் மாவட்டம், வேலுார் சத்துவாச்சாகரி வேளாளர் தெருவில், அப்பர் சுவாமி கோவில் எதிரில், 1,000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஒன்று உள்ளது.

இதை சுத்தம் செய்து படி எடுக்கும் பணியை, தொல்லியல் துறை உதவி இயக்குனர் பூங்குன்றன் தலைமையில், வேலுார் அரசுங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் உள்ளிட்டோர் செய்து வந்தனர்.

தற்போது இந்த பணிகள் முடிந்த நிலையில் தொல்லியல் துறை உதவி இயக்குனர் பூங்குன்றன் இந்த இந்த கல்வெட்டில் 28 வரிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த கல்வெட்டில், வேலுார் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலை கட்டியது சின்ன மொம்மி நாயக்கர் என்றும்,

இந்த கோவிலை பராமரிப்பதற்காக, சத்துவாச்சாரி கிராமத்தை தேவதானமாக கோவிலுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் பகிர்ந்தார்.

ஒரு கோவிலை பராமரிக்க ஒரு கிராமத்தையே தானமாக வழங்கிய செய்தியை கல்வெட்டிலும் செதுக்கி வரலாற்றில் இடம் பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.