வெறும் 10 செகண்டுக்கு ரூ.4.5 லட்சம்; நிராகரித்த வில்லேஜ் குக்கிங் சேனல் - இதுதான் காரணம்!
தங்களுக்கு வந்த ஆஃபர்ஸ் குறித்து வில்லேஜ் குக்கிங் சேனல் தரப்பினர் தகவல்கள் பகிர்ந்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் மாநாடு
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றுவருகிறது. கடைசி நாளான இன்று 300க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து கலந்துக்கொண்டுள்ளார். இந்நிலையில், இதில் 'தி வில்லேஜ் குக்கிங்' சேனலை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இவர்கள் சேனலிற்கு 2 கோடிக்கும் மேல் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
வில்லேஜ் குக்கிங் சேனல்
மாதந்தோறும் ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதித்து வருகின்றனர் தொடர்ந்து, கலந்துரையாடலில் "ஒருவரிடம் இருந்து பணம் வாங்கிவிட்டால், அதற்காக அவர்களுக்கு வேலை செய்ய வேண்டி இருக்கும். நமது வீடியோவில் அவர்களுக்கு சில நொடிகளை ஒதுக்க வேண்டும். எங்கள் ஆடியன்ஸ் எங்கள் வீடியோவை பிடித்திருப்பதால் தான் பார்க்கிறார்கள்.
அதற்கு இடையே, ஏதாவது பொருட்களுக்கு ப்ரொமோஷன் செய்வதற்கு எங்களுக்கு மனம் ஒப்பவில்லை. ஏற்கனவே யூடியூபில் விளம்பரம் மூலம் வருமானம் வருகிறது. அதற்கு மேலும் கூடுதலாக தனியாக விளம்பரம் பார்க்க வைத்து வருமானம் பெற விரும்பவில்லை.
ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் கண்டெண்ட் தர வேண்டும் என்பதற்காகவே பிராண்ட் ப்ரொமோஷன்களை தவிர்த்து வருகிறோம். எங்கள் சேனலுக்கு 5 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருந்தபோது நாங்கள் ஒரு பிராண்ட் ப்ரொமோஷன் ஆஃபரை மறுத்தோம். ஒரு சாக்லேட் கம்பெனியினர் வந்து, உங்கள் வீடியோவில்,
யாருக்காவது பிறந்தநாள் என எங்கள் சாக்லேட்டை கொடுக்க வேண்டும். ஒரு 10 செகண்ட் வந்தால் போதும், ரூபாய் நான்கரை லட்சம் தருகிறோம் என்று கூறினார்கள். 5 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருந்தபோதே அவ்வளவு. இப்போது 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் என்பதால் இந்த மதிப்பு எவ்வளவோ இருக்கும். அப்போது வந்த ஆஃபரை மறுத்தோம். அதன் பிறகும் ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், அவற்றைச் செய்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை" எனத் தெரிவித்துள்ளனர்.