முதல்வர் விஜய் குறித்து அவதூறு.., திமுக எம்.எல்.ஏ கைது
முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் குறித்து அவதூறு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

சட்டமன்றத்தை கூட்டும் போது உனக்கு (முதலமைச்சர் விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம் சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று பேசி இருந்தார்.
இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
திமுக எம்எல்ஏ கைது
இந்த புகாரின் அடிப்படையில், இன்று காலை போலீசார் மார்க்கண்டேயனை கைது செய்தனர்.
இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
அவரது கைதை எதிர்த்து ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அவர் மீது கொலை மிரட்டல், அவமதிப்பு பேச்சு, தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.