உக்ரைனின் அடுத்த அதிபர் இவர் தான் - ரஷ்யா போட்ட ரகசிய திட்டம்
உக்ரைனின் அடுத்த அதிபராக அந்நாட்டின் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்சை பதவியில் அமர்த்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னதாக இதற்கான பணிகளில் இருந்த போது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறிய ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மக்களும், படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள போரை நிறுத்த உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ரஷ்யா-உக்ரைன் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச்சை மீண்டும் அதிபராக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் விக்டர் யனுகோவிச் இருப்பதாக கூறப்படும் நிலையில், கடந்த 2010-2014 காலகட்டத்தில் உக்ரைன் அதிபராக இருந்த விக்டர் 'உக்ரேனிய புரட்சி' மூலம் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.