விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வெற்றி யாருக்கு? IBC TAMIL கருத்துக்கணிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பை IBC TAMIL நடத்தியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 14 ம் தேதி நடை பெற உள்ளது.
இங்கு திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன், பாமக சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்த கருத்துக்கணிப்பை IBC TAMIL நடத்தியுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு முடிவில் 50,000 க்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெறுவார் என தெரிய வந்துள்ளது.