அந்த ஒரு விஷயத்தில் பிடிவாதம் - விஜய் மகன் குறித்து விக்ராந்த் ஓபன்டாக்!
ஜேசன் சஞ்சய் பற்றி விக்ராந்த் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
ஜேசன் சஞ்சய்
தளபதி விஜய்யை தொடர்ந்து, அவருடைய குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தவர் அவரின் சித்தி மகனான விக்ராந்த். இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்,

விஜய் தன்னுடைய மகனின் விருப்பமே தன்னுடைய விருப்பம் என்பதில் உறுதியாக இருந்ததால், எந்த ஒரு கட்டத்திலும் மகனை நாடி என கட்டாயப்படுத்தவில்லை. அதே நேரம் ஜேசன் சஞ்சய்க்கு சிறு வயதில் இருந்தே, தன்னுடைய தந்தை போல் ஒரு நடிகராக சினிமாவில் அறிமுகமாக விருப்பம் இல்லை.
விக்ராந்த் தகவல்
ஒரு இயக்குனராக அறிமுகமாவதையே அவர் விரும்பினார். அதே போல் தன்னுடைய சொந்த முயற்சியால் மட்டுமே வளர வேண்டும் என நினைக்கிறார். எப்போதுமே தன்னுடைய தந்தையின் பெயரை அவர் பயன்படுத்தியது இல்லை.

இவரின் இந்த எண்ணமே அவரை பல மடங்கு உயர்த்தும் என தெரிவித்துள்ளார். ஜேசன் சஞ்சய், இயக்குனராக அறிமுகமாகி உள்ள 'சிக்மா ' திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.