நாட்டின் கடல்சார் பாதுகாப்பிற்கு ஐஎன்எஸ் விக்ராந்த் முக்கியமானது - ராகுல் காந்தி

Rahul Gandhi
By Irumporai Sep 02, 2022 11:43 AM GMT
Report

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். கடற்படையில் இணைந்துள்ள ஐ.என்.எக்ஸ்.விக்ராந்த் கப்பலில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன.

விக்ராந்த் கப்பல்

ரூ.20 ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பலை பி.எச்.இ.எல். மற்றும் எல்.என்.டி. உள்ளிட்ட சுமார் 500 இந்திய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ளன. இந்த கப்பல் இந்திய கடற்படைக்கு மேலும் பலத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது.

நாட்டின் கடல்சார் பாதுகாப்பிற்கு ஐஎன்எஸ் விக்ராந்த் முக்கியமானது  - ராகுல் காந்தி | Vikrant Indias Maritime Security Rahul Gandhi

மேலும் இந்து மகா சமுத்திரத்தில் இந்திய கடற்படைக்கு வலுசேர்த்து கடல் எல்லைகளை காக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரமாண்டமான போர்க்கப்பலின் தொடக்க விழா கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது.

கப்பல்  குறிப்பிடத்தக்க நடவடிக்கை

உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலை இயக்கியதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் : ஐஎன்எஸ் விக்ராந்தின் தொலைநோக்கை நனவாக்கிய இந்திய கடற்படை, கடற்படை வடிவமைப்பு பணியகம் மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு வாழ்த்துக்கள்.

நாட்டின் கடல்சார் பாதுகாப்பிற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை" என்று குறிப்பிட்டவர் விமானம் தாங்கி கப்பலின் படத்தையும் பகிர்ந்துள்ளார்.