போட்டிக்காக பயிற்சி கொடுக்கிற அதிகாரிகளை கேள்வி கேட்பேன்': மிரட்டும் டாணாக்காரன் திரைப்பட டீசர்
காவலர் பயிற்சி பெறுபவராக விக்ரம்பிரபு நடித்துள்ள டாணாக்காரன் திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகிவருகிறது.
பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் டாணாக்காரன்.
இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநராக பணியாற்றிய தமிழ் புதுமுக இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் லால். அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கமும், இசையமைப்பாளராக ஜிப்ரானும், படத்தொகுப்பாளராக ஃபிலோமின் ராஜ் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர்.
இந்தப்படம் பயற்சி காவலர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சியாளர்களாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையேயான சிக்கலை கதைக் களமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின் டீசர் இன்று இணையத்தில் வெளியானது. காவல்துறை பயிற்சி பெறுபவராக வரும் விக்ரம் பிரபு போட்டிக்கா மட்டும் பயிற்சி கொடுக்கிற இந்த அதிகாரிகளை நான் கேள்வி கேட்பேன்'
[
என்ற வசனத்தோடு டீசர் முடிகிறது.
தற்போது டாணாக்காரன் திரைப்படத்தின் டீசருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு ட்ரெண்டிங்கிலும் உள்ளது.