பெண் வேடமிட்டு தாக்குதல்; வைரலான ‘சர்ச்சை’ வீடியோ - விக்ரமனின் மனைவி விளக்கம்!

Chennai Vikraman
By Sumathi Mar 10, 2025 07:10 AM GMT
Report

விக்ரமன் குறித்த பரவிய சர்ச்சை வீடியோ தொடர்பாக அவரது மனைவி புகாரளித்துள்ளார்.

 சர்ச்சை வீடியோ

பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் விக்ரமன். இவர் பெண் வேடமிட்டு, அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் ஊழியரை பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

vikraman and wife

 இந்நிலையில் தனது கணவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது வீடியோவை வெளியிட்டுள்ளதாக விக்ரமனின் மனைவி பிரீத்தி குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து இது குறித்து திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள விக்ரமன் மற்றும் அவரது மனைவி பிரீத்தி செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஒரு பைக்கில் 3 பேர்; மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண் - வீடியோ காட்சிகள் வைரல்!

ஒரு பைக்கில் 3 பேர்; மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண் - வீடியோ காட்சிகள் வைரல்!

விக்ரமன் மனைவி புகார்

அப்போது, திட்டமிட்டு இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சூட்டிங் ரிகர்சல் செய்யப்பட்டது. அதனை தவறாக சித்தரித்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண் வேடமிட்டு தாக்குதல்; வைரலான ‘சர்ச்சை’ வீடியோ - விக்ரமனின் மனைவி விளக்கம்! | Vikraman Viral Controversial Video Wife Explains

திரைப்படத்திற்காக விக்ரமன் ரிகர்சல் செய்து பார்த்தபோது எதிர்பாராத விதமாக நடைபெற்ற பிரச்சனை அப்போது அங்கிருந்தவர்கள் அவரை தவறாக நினைத்து பிரச்சினை செய்தார்கள். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து அப்போதே சமரசம் செய்யப்பட்டது.

ஆனால் தற்போது பிரஸ்டீஜ் குடியிருப்பில் நடைபெற்று வரும் பிரச்சனை காரணமாக திசை திருப்ப இந்த வீடியோ வெளியிட்டுள்ளனர். எனவே வீடியோவை வெளியிட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.