பிக்பாஸ் 6 டைட்டிலை வெல்லப்போவது விக்ரமனா அசீமா - இணையத்தின் ஹாட் டாபிக்!
பிக் பாஸ் தமிழ் 6-ன் வெற்றியாளர் யார் என்பது தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
பிக்பாஸ் 6
பிக் பாஸ் தமிழ் 6-வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, அமுதவாணன் ஆகிய 5 பேர் மட்டுமே உள்ளனர். இதில் வெற்றி பெறப்போவது விக்ரமனா அல்லது அசீமா என்பது தான் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு.
பத்திரிக்கையாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விக்ரமன், தனது கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல் எடுத்து வைப்பதோடு, கிடைக்கும் கேப்பில் எல்லாம் சமூக நீதி, பெண்ணுரிமை, பகுத்தறிவு சிந்தனைகளை பேசி பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார்.
வெற்றியாளர் யார்?
சீரியல் நடிகர் அசீம், தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துவது, மற்றவர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது, எந்த ஒரு சாதாரண உரையாடலையும் சண்டையாக மாற்றுவது என வலம் வருகிறார். இதில், விக்ரமனின் அரசியல் நிலைபாடுகளில் எதிர் கருத்து கொண்டவர்கள், அசீமுக்கு ஆதரவாக இணையத்தில் களமாடுகின்றனர்.
இந்நிலையில், விக்ரமன் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவருக்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு, ஒருபக்கம் ஆதரவையும், மறுபக்கம் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
தற்போது இணையத்தில் அனல் பறக்கும் டாப்பிக்காக இதுதான் இருந்து வருகிறது. தொடர்ந்து பார்ப்போம் பிக்பாஸ் டைட்டிலை தட்டிச்செல்ல போவது யாரென்று..?

விடுதலைப்புலிகளின் பணத்திற்கு என்ன நடந்தது..! கே. பி - கோட்டா டீல்: அம்பலப்படுத்தும் பொன்சேகா IBC Tamil
