பிக் பாஸுக்கு பிறகு விக்ரமன் செய்த செயல் : பாராட்டும் ரசிகர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முடிவுக்கு வந்தது இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்த்த நிகழ்வுகள் கடைசி நேரத்தில் மாறிவிட்டது என்று ரசிகர்கள் ஒரு பக்கம் தங்களின் விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 6
அதே சமயம் அசீமுடைய ரசிகர்கள் மக்களின் தீர்ப்பு வென்று விட்டது என்று கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனின் டைட்டில் வின்னர் விக்ரமன் தான் என்று ரசிகர்கள் அதிகமானோர் கருத்து கூறி வந்த நிலையில் கடைசி நேரத்தில் எதிர்பாராத மாற்றம் நடைபெற்று விட்டது .இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியாக இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து குறி வருகின்றனர்.
#Ambedkar யே தோற்கடிச்ச மக்கள் வாழும் நாட்டில், அவரின் பெயரை உரக்க சொல்லிய உன்னை #Vikraman இம்மக்கள் தோற்கடித்தில் பெரிய ஆச்சர்யம் இல்லை.! #சாதி இன்னும் அணு குண்டைப் போன்று அதே வீரியத்துடன் தான் இருக்கிறது.! #BigBossTamil6 pic.twitter.com/xOLDCevYJz
— அருள்மணி பெருமாள் (@ArulmaniSpa) January 23, 2023
விக்ரமன் மரியாதை
இந்த நிலையில் வின்னராக தேர்வாகி இருக்கும் விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் அம்பேத்கர் படத்தின் முன்பு மலர்களை தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார்.

தன்னுடைய ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி "ஜெய் பீம்" என்ற வீர கோஷத்தை எழுப்பி மகிழ்ந்திருக்கிறார். விக்ரமுடைய செயலை அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது
பரபரப்பு சம்பவம்: வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு - இலக்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப்..! IBC Tamil
வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு : அமெரிக்க இரகசிய சேவைக்கு நன்றி தெரிவித்த பிரித்தானிய தூதுவர் IBC Tamil
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan