உங்கள் அன்புக்கு நன்றி.. சிகிச்சை முடிந்து முதல்முறையாக நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அவர் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் மாரடைப்பு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் தீயாய் பரவத்தொடங்கின. நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அறிந்த சினிமாத்துறையினரும், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மகன் துரு வருத்தம்
இதனையடுத்து விக்ரம் மகன் துரு, என் தந்தைக்கு மாரடைப்பு இல்லை. அவருக்கு நெஞ்சில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வதந்திகளை கேட்டு எங்கள் மனம் வலிக்கிறது. அப்பா நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.
விக்ரம் முதல் முறையாக வெளியிட்ட வீடியோ
இந்நிலையில், சிகிச்சை முடிந்து விக்ரம் கடந்த 8ம் தேதி நலமுடன் வீடு திரும்பினார். தற்போது, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய விக்ரம் முதல் முறையாக வீடியோ ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‘நீங்கள் காட்டிய அன்பும் அக்கறையும் பார்த்து நான் வியந்து போனேன். என் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கும் அக்கரைக்கும் மிக மிக நன்றி’ என்று நன்றி தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சார்... நீங்கள் நலமா... ஒன்று மில்லையே... உங்கள் பேச்சு எங்களுக்கு மனநிம்மதியை கொடுத்திருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
“I’m all right.. love all..” #chiyaanVikram pic.twitter.com/6UUjt4VBWp
— FridayCinema (@FridayCinemaOrg) July 10, 2022
ரெளடி பேபி பாடலின் போது எனக்கு மாதவிடாய் நாள்தான்.. சாய்பல்லவி ஓபன் டாக்!