Tuesday, Apr 29, 2025

ஹிந்தியில் வெளியாகும் ‘விக்ரம் வேதா’ - இணையத்தை கலக்கும் FIRST லுக் போஸ்டர்

vikramvedhahindiremake vikramfirstlook saifalikhanhrithikroshan
By Swetha Subash 3 years ago
Report

தமிழில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் ஆகியோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் 'விக்ரம் வேதா'.

சாம் சி எஸ் இசையமைத்திருந்த இந்த படத்தை சஷிகாந்த் தயாரித்திருந்தார்.

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து விக்ரம் வேதா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஹிந்தியில் வெளியாகும் ‘விக்ரம் வேதா’ - இணையத்தை கலக்கும் FIRST லுக் போஸ்டர் | Vikram Vedha Hindi Remake First Look Poster

இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக படக்குழு முன்பே அறிவித்திருந்தது. அதற்கான வேளைகளையும் முழு வீச்சில் செய்துவந்தது.

தமிழில் இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஜோடி தான் இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகின்றனர்.

இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரமுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.