புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் ட்ரைலர்... தெறிக்கவிட்ட கமல்!
உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த, உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு மிகப்பெரிய அளவில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயணம் செய்து புரமோஷன் செய்துவருகிறார்.
இதனைத் தொடர்ந்து, துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிபா என்ற கட்டிடத்தில் விக்ரம் படத்தின் ட்ரைலர் நேற்று இரவு வெளியானது.
இதனை நேரில் பார்க்க கமல்ஹாசன் துபாய் சென்று இருந்தார். புர்ஜ் கலிபா கட்டிடத்தில் விக்ரம் டிரைலர் வெளியான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விக்ரம் படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காயத்ரி ஷங்கர், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்
தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.