விராட் கோலி இந்த தப்பை செய்யாம இருக்கணும் - பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் வேண்டுகோள்

virat kohli INDvSA vikramrathour
By Petchi Avudaiappan Dec 30, 2021 07:48 PM GMT
Report

இந்திய டெஸ்ட் அணியின்  கேப்டன் விராட் கோலியில் பேட்டிங் குறித்து அணியின் பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் விளையாடி வருவது பெரிய அளவில் அவர் மீதான பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 

தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான் முதல் டெஸ்ட் போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் இன்னிங்ஸில் 35 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 18 ரன்களும் மட்டுமே எடுத்தார். 

இந்நிலையில் விராட் கோலியின் விக்கெட்டுகள் ஒரே மாதிரிதான் விழுகிறது என்றும் அதனை அவர் திருத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

விராட் கோலிக்கு தற்போது ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வரும் பந்துகளை கவர் டிரைவ் ஆடும்போது பிரச்சனை இருக்கிறது.அந்த ஷாட்டுகளை விளையாடுவதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் அதற்கு ஏற்ற சரியான பந்தினை தேர்வு செய்து விளையாட வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.