விக்ரம்-ஐ தேடும் பஞ்சதந்திரக் குழு : வெளியான அசத்தல் ப்ரோமோ
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளரான அனிருத் இசை அமைத்துள்ளார். இதுவரை படத்தில் இருந்து வெளியிடப்பட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாகும் விக்ரம் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் படுபிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன்.
இந்த நிலையில் விக்ரம்படத்தின் பட விளம்பரத்திற்காக பஞ்ச தந்திரம் படத்தில் நடித்த ஜெய்ராம் ,யூகி சேது,ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த் ஆகியோர் போனில் நகைச்சுவையாக பேசி விகரம் படத்தினை விளம்பரப் படுத்துவது போல் காட்சியமைத்துள்ளனர் அந்த வீடியோ உங்களுக்காக