வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyrics-ல இறக்கிட்டாப்ல கமல் - கஸ்துாரி ட்வீட்..!

Kamal Haasan Kasthuri Vikram Movie
By Thahir May 12, 2022 01:12 AM GMT
Report

வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல கமல் என்று நடிகை கஸ்துாரி கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் பத்தல பத்தல என்ற பஃர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியானது. விக்ரம் திரைப்படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையில் உருவாகி உள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு சொந்தமான ரென் ஜெயண்ட் மூவிஸ் கைப்படற்றியுள்ளது.

இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியது.

அதன்படி, ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள 'பத்தல பத்தல' பாடல்  மே 11 வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசனின் கணீர் குரலில் 'பத்தல பத்தல' கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே..பஃர்ஸ்ட் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. இந்த பாடல் யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் இப்பாடல் குறித்து நடிகை கஸ்துாரி தனது ட்விட்டர் பக்கத்தில் சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல்,வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல.

ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு! என கருத்து தெரிவித்துள்ளார்.