நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் டிரைலர் வெளியானது..!

Vikram Movie
By Thahir May 15, 2022 03:57 PM GMT
Report

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் டிரைலர் வெளியானது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கமல்ஹாசன் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விக்கரம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,கிரிஷ் சங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் வருகிற ஜுன் 3-ம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தில் பத்தல பத்தல பாடலை கமல்ஹாசன் எழுதி பாடியுள்ளார்.

இதனிடையே இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.தற்போது இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 'விக்ரம்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விக்ரம் படத்தின் டிரைலர் வெளியாகி ஒரு மணி நேரத்தில் யூடியூப்பில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.