மே 15 ரெடியா இருங்க...சிறப்பான சம்பவம் இருக்குது..விக்ரம் அப்டேட் இதோ
நடிகர் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே படத்தின் முன்னோட்டம் 2020 ஆம் ஆண்டு கமல் பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பெரும் வரவேற்பை பெற்றது.
#Vikram audio & trailer launch on May 15th
— VijaySethupathi (@VijaySethuOffl) May 2, 2022
@anirudhofficial musical.#VikramAudioLaunch#VikramFromJune3 @ikamalhaasan @Udhaystalin @Dir_Lokesh #FahadhFaasil #Mahendran @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/CrmawN3QSu
கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் முக்கியமான படங்களில் ஒன்றான ‘விக்ரம்’ உலகம் முழுக்க வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாவுள்ளது.
இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வரும் மே 15 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.