படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ’விக்ரம்’ படத்தின் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு - வைரல்!
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளரான அனிருத் இசை அமைத்துள்ளார். இதுவரை படத்தில் இருந்து வெளியிடப்பட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
விக்ரம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் படம் வருகிர ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், படத்தின் புரமோஷன் வேலைகளில் படுபிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன்.
தற்போது, படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட விக்ரம் படத்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.