மாஸ்ஸாக வெளியான விக்ரம் படத்தின் அடுத்த அப்டேட் - குஷியான ரசிகர்கள்
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தில் இடம் பெற்றுள்ள 2 ஆம் பாடலின் வரிகள் கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான இந்தப்படத்தின் டீசர் , கிளிம்ப்ஸ் காட்சிகள், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பாடலின் வீடியோ மாபெரும் வரவேற்பை பெற்றது.
இசை வெளியீட்டு விழாவும் கடந்த மே 15 ஆம் தேதி பிரமாண்டமாக நடந்த நிலையில் படத்தின் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலான போர்கண்ட சிங்கம் பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

அதிர்ஷ்டத்தை பாக்கெட்டில் வைத்திருக்கும் லட்சியவாதிகள் பிறந்த மாதம் என்ன? ஜோதிட சாஸ்த்திரம் Manithan
