விக்ரம் படத்தில் கமலுக்கு மேக் அப் போட்டவர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க - ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தகவல்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் விக்ரம். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அழ்வார்பேட்டையில் சாம்கோ ஹோட்டல் முன்பு கமல் சாரைப் பார்க்க 10 - 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஏங்கி நிற்பேன். ஆனால் இன்று அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விக்ரம் படத்துக்காக பயிற்சியாளர்களைக் கொண்டு விஜய் சேதுபதி பயிற்சி எடுத்தார்.
அதேபோல் ஃபகத் பாசிலின் படங்களைப் பார்த்த பிறகு அவர் அமைதியானவர் என நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு மிகக் குறைந்த நாளில் நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம் என லோகேஷ் கூறினார்.
மேலும் ஒரு விஷயத்தை ரகசியமாக வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் வெளியில் தெரிந்து விட்டது. ஆம் விக்ரம் படத்தில் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என அவர் கூறினார்.
இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இதை தொடர்ந்து படம் குறித்த பல்வேறு விஷயங்களை இயக்குனர் லோகேஷ் ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார். அப்படி, விக்ரம் படத்தில் நடிகர் கமலுக்கு ரத்தக்கரை படிந்தது போல் உள்ள மேக் அப்-ஐ யார் போட்டது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விக்ரம் ஷூட்டிங்கின்போது நடிகர் கமலின் மேக் அப் மேனாக தான் 32 நாட்கள் இருந்ததாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
“ரத்தக் கறை உள்ளது போன்ற லுக் வேண்டும் என்பதால் நானே மேக் அப் போட்டுவிடவா என்று அவரிடம் கேட்டபோது அவரும் ஒப்புக்கொண்டார். கமல் சாருக்கு மேக் அப் போட்டுவிட்ட முதல் இயக்குனர் நான் தான்” என லோகேஷ் தெரிவித்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.