ரூ. 30 லட்சம் கொரோனா நிதி வழங்கிய சீயான் விக்ரம்
covid19
tamilnadu
vikram
covidfound
By Irumporai
தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் நிவாரண நிதிக்கு தாராளமாக கொடுக்கலாம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
அதன் அடிப்படையில் திரைத்துறையினர் , பொதுமக்கள் , தொழிலதிபர்கள் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு ரூ. 30 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விக்ரம்.
வங்கிப் பரிவர்த்தனை மூலமாக நிவாரண நிதியை தமிழக அரசுக்கு அவர் அனுப்பியுள்ளார்.