மிரட்டும் கெட்டப்பில் கமல் - விஜய் சேதுபதி: விக்ரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Vikram Actor kamalhassan Actor vijaysethupathi Fahaadfasil
By Petchi Avudaiappan Jul 10, 2021 12:01 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே படத்தின் முன்னோட்டம் கமல் பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி, கமல்ஹாசன், ஃபகத் பாசில் மூவரும் மிரட்டலாக காட்சியளிக்கின்றனர்.

இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் கமல்ஹாசன் "வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்" என பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.