இறுதிவரை போராட்டம்... ஆனாலும் குத்துச்சண்டையில் தோல்வி...

Tokyo Olympics Vikas kishan
By Petchi Avudaiappan Jul 24, 2021 03:48 PM GMT
Report

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிஷான் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்துள்ளார்.

69 கிலோ எடை பிரிவில் கலந்துக்கொண்ட அவர், ஜப்பானின் குயுன்சி செவான்ரெட்ஸ் ஒகாசாவாவை எதிர்கொண்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் தொடக்கம் முதலே குயுன்சியின் கையே ஓங்கியது. அதேசமயம் விகாஸ் கிஷண் சிறப்பாக விளையாடிய போதிலும் குயுன்சியிடம் அவரது ஆட்டம் எடுபடவில்லை.

இதனால் முதல் சுற்றில் குயின்சி ஒகாசாவா 10 - 9 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2வது மற்றும் 3வது சுற்றில் 10 - 9, 10 - 8 என்ற கணக்கில் ஜப்பான் வீரர் குயின்சி ஒசாகாவா வெற்றி பெற்றார். இதன் மூலம் விகாஸ் கிஷண் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.

நிச்சயம் இந்தமுறை விகாஸ் கிஷண் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றுவிடுவார் என நம்பிக்கையுடன் இருந்த நிலையில் அவரின் இந்த தோல்வி ஏமாற்றத்தை அளித்துள்ளது.