அதிமுக சசிகலாவை வேண்டாம் என்று சொல்வது ஏன்? - பிரேமலதா கேள்வி

admk premalatha
By Jon Jan 25, 2021 03:11 PM GMT
Report

அதிமுக சசிகலா அவர்களை ஏற்கமறுப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் சசிகலா அவர்களது விடுதலைக் குறித்தும் அதன் பிறகு அவரை அதிமுக நிராகரிப்பதும் எதனால் என்ற கேள்வியை எழுப்பினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது, சசிகலா விடுதலையை வரவேற்கிறேன், தமிழக அரசியலில் பங்கெடுக்க வேண்டுமென ஒரு பெண்ணாக முழு ஆதரவு தருகிறேன். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் திமுக, அதிமுகவிற்கே இது முதல் தேர்தல்.

விஜயகாந்த் அனுமதி கொடுத்தால் வரும் தேர்தலில் போட்டியிடுவேன். ஜெயலலிதாவிற்காகவே வாழ்ந்தவர் சசிகலா. சசிகலாவுக்கு என்று தனி வாழ்க்கை கிடையாது. அவர்களால் ஆதாயம் பெற்றவர்கள் அதிகம்.

தற்போது அவரை வேண்டாம் என சொல்வது மனதுக்கு கடினமாக உள்ளது. அவரது விடுதலையை வரவேற்கிறேன்.