விஜய் படமே 2 நாட்களுக்கு மேல் ஓடாது..கட்சிலாம் 6 மாதம்தான் - திமுக அமைச்சர் விமர்சனம்!

Vijay DMK Viluppuram Thamizhaga Vetri Kazhagam
By Swetha Sep 12, 2024 03:59 AM GMT
Report

விஜய்யின் கட்சி 6 மாதங்கள்தான் தாக்குப் பிடிக்கும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

விஜய் கட்சி

நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு வருகின்ற 23ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. ஏராளமான தடைகளுக்கு பிறகு இந்த மாநாட்டை நடத்த விஜய் கட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது.

விஜய் படமே 2 நாட்களுக்கு மேல் ஓடாது..கட்சிலாம் 6 மாதம்தான் - திமுக அமைச்சர் விமர்சனம்! | Vijays Party Last Only For 6 Months Says Anbarasan

அவரது இந்த முதல் மாநாடு அனைத்து அரசியல் கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த நிலையில், மாடம்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு பேசியதாவது,

பாஜகவில் உள்ள முக்கிய பிரபலங்கள்..விஜய் கட்சியில் இழுக்க முயற்சி - பின்னணி என்ன?

பாஜகவில் உள்ள முக்கிய பிரபலங்கள்..விஜய் கட்சியில் இழுக்க முயற்சி - பின்னணி என்ன?

அமைச்சர் 

இன்று நடிகர்கள் எல்லாம் அரசியல் பக்கம் வந்துவிட்டனர். ஏற்கனவே வந்த நடிகர் நிலைமை எல்லாம் என்ன என்று நாம் பார்த்துவிட்டோம். அதேபோல் தற்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார்.

விஜய் படமே 2 நாட்களுக்கு மேல் ஓடாது..கட்சிலாம் 6 மாதம்தான் - திமுக அமைச்சர் விமர்சனம்! | Vijays Party Last Only For 6 Months Says Anbarasan

யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுகதான். விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அதனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 6 மாதங்கள்தான் தாக்குப் பிடிக்கும்.

அதற்கு மேல் தாங்காது. சினிமாவுக்கு வருகிற கூட்டத்தை பார்த்து நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். 6 மாதத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்ற சினிமா பெட்டியை உள்ளே வைத்துவிடலாம் எனப் பேசியுள்ளார்.