லியோ ஒரு குப்பை படம்!! விஜய்யே சொன்ன மீசை'ய எடுக்குறேன்!! மீண்டும் உரசும் மீசை ராஜேந்திரன்!!
விஜய்யின் லியோ ஜெயிலர் வசூலை முறியடித்தால் மீசையை எடுப்பதாக சொன்ன மீசை ராஜேந்திரன் அண்மையில் அளித்த பேட்டியில், தனது நிலைப்பாட்டை மாற்றி பேசி இருக்கின்றார்.
லியோ
விஜய் ரஜினி இடையே தொழில் ரீதியில் தற்போது பெரிய போட்டி உருவாகி இருக்கும் சூழலில், தொடர்ந்து விஜய்யின் லியோ ரஜினியின் ஜெயிலர் பட வசூலை காலி செய்யும் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
அதே நேரத்தில், வெளியாகியுள்ள லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இருப்பினும் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை குவித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது. படம் 1000 கோடி வசூலை நிச்சயமாக நெருங்காது என்பது உறுதியாக தற்போது பலரும் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், படம் ஜெயிலர் தாண்டும் என்ற வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
விஜயே சொல்லட்டும் எடுக்குறேன்
இதன் நடுவில், லியோ படத்தின் வெளியிட்டிற்கு முன்பாக படம் ஜெயிலர் பட வசூலை மிஞ்சினால் மீசையை எடுக்கிறேன் என்ற மீசை ராஜேந்திரன் தற்போது அப்படியே மாற்றி பேசியிருக்கின்றார். நேற்று அவர் அளித்த பேட்டி துவங்குவதற்கு முன்பாகவே, தொகுப்பாளர் ட்ரிம்மர் மிசினை காண்பித்து பயங்காரமாக கலாய்த்துள்ளார்.
பேட்டியில் பேசிய மீசை ராஜேந்திரன், விஜய் சூப்பராக நடித்து விட்டார், ஆனால் தனக்கு படம் பிடிக்கவில்லை என்றும் அது ஒரு குப்பை படம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மேலும், "லியோ" முதலில் ஆயிரம் வசூலிக்கட்டும், அதை விஜய் சாரே அவர் வாயலாயே சொல்லட்டும்,அப்போது என் மீசையை எடுக்கிறேன். அதுவரை எடுக்க மாட்டேன் என்றார்.
ஜெயிலர் வசூலை லியோ முந்தாது என உறுதிபட தெரிவித்த அவர், ஜெயிலர் மற்றும் 2.O படங்களில் வசூலை தாண்டினால், மீசையை எடுக்கிறேன் என மொத்தமாக மாற்றி கூறியுள்ளார். முன்னர் ஜெயிலர் படம் பற்றி மட்டுமே பேசி வந்த மீசை ராஜேந்திரன் தற்போது செப்டிக்காக 2.O படத்தை துணைக்கு அழைத்து கொண்டுள்ளார்.