சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!
vijayakanth
backtohome
By Irumporai
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார்.
உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக தான் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,தேமுதிக தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.