இணையத்தை கலக்கும் விஜய்காந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

fans happy Vijaykanth வைரல் latest-photo-viral விஜய்காந்த் லேட்டஸ்ட்புகைப்படம் ரசிகர்கள்மகிழ்ச்சி
By Nandhini Apr 06, 2022 12:59 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவா 1980-90-கள், மற்றும் 2000-ஆண்டுகளில் கொடிக்கட்டி பறந்து பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவை தொடர்ந்து தேமுதிக என்ற கட்சியை உருவாக்கிய விஜயகாந்த் முழுநேர அரசியலில் ஈடுபட்டார்.

அதன் பின் சந்தித்த முதல் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தேமுதிக வெற்றி பெற்றாலும், அடுத்த தேர்தலில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகி அமர்ந்தது.

இவருடன் கூட்டணி வைக்க, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆர்வம் காட்டின. இதற்கிடையில், திடீரென்று விஜயகாந்த்திற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதனால், அவர் அரசியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினார். இதனையடுத்து, கட்சியும் வீழ்ச்சி அடைந்தது.

சமீபத்தில் விஜயகாந்த்தின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது. அந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் புகைப்படத்தில் அவர், உடல் மெலிந்து தோல் சுருங்கி ஆள் அடையாளம் காண்பதற்கே கடினமான நிலையில் இருந்தார்.

இணையத்தை கலக்கும் விஜய்காந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Vijaykanth Latest Photo Viral

ஆனால், தற்போது விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முக பாண்டியனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் இப்படத்தில் விஜய்காந்த் ரொம்பவே அழகாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதந்துள்ளனர்.   