உடல்நலக் குறைவிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கும் விஜய்காந்த்.!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை முதல் 5 நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தேமுதிக தெரிவித்துள்ளது. விஜயகாந்த் கும்மிடிப்பூண்டியில் தொடங்கி திருத்தணி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கூட்டணியை விட்டு வெளியேறியது.
இதனையடுத்து, அமமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் அளித்துள்ளது அமமுக. இந்தத் தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் போட்டியிடவில்லை. இருப்பினும் தேமுதிகவின் செண்டிமெண்ட் தொகுதியான விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் களமிறங்கி இருக்கிறார்.

இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் விஜயகாந்த், அமமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
நாளை முதல் 5 நாட்களுக்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜயகாந்த் நாளை கும்மிடிபூண்டியில் பிரச்சாரம் தொடங்கி திருத்தணி உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார் என்று தேமுதிக தெரிவித்துள்ளது.