இதனால்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாமென முடிவெடுத்தேன் - மனம் திறந்த விஜயசாந்தி
குழந்தை பெற்றுக்கொள்ளாதது குறித்து விஜயசாந்தி மனம் திறந்து பேசியுள்ளார்.
விஜயசாந்தி
பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயசாந்தி. தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பில் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்ட அவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆகவும் தேர்வு செய்யப்பட்டார்.
குழந்தை வேண்டாம்
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாதது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். இதில் பேசிய அவர், குழந்தை என்றால் யாருக்குதான் பிடிக்காது. எல்லா பெண்களுக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஏனெனில் ஒரு பெண்ணுக்கு அதுதான் ரொம்ப முக்கியமான விஷயம்.அந்த விஷயத்தை பத்தி ரொம்ப யோசித்தேன். எனக்கு குழந்தைங்க இருந்தா, எங்கேயோ ஒரு இடத்தில் தெலுங்கானாவில் அதை வைத்து என்னை பிளாக்மெயில் பண்ணுவாங்கன்னு எனக்கு சந்தேகம் வந்தது.
அப்போது சூழலும் அந்த மாதிரி இருந்தது. இதனால், குழந்தைகளை வேண்டாம் என முடிவு செய்தேன். மக்கள்தான் என்னுடைய குழந்தைகள் என்று நினைத்தேன். இந்த முடிவை எனது கணவரிடம் கூறியபோது அவரும் ஏற்றுக்கொண்டார் என பேசியுள்ளார்.