மிரட்டும் பிச்சைக்காரன் 2 டைட்டில் லுக்: யார் இயக்குநர் தெரியுமா?

vijayantonyfilm Pichaikkaran2
By Irumporai Jul 24, 2021 10:17 AM GMT
Report

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி. தனது நடிப்பின் மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி ஹிரோக்களில் ஒருவராக மாறி உள்ளார் .

இவருக்கு புகழ் சொல்லும் படமாக இயக்குனர் சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன்.

இப்படத்தில் பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்தார். செண்டிமெண்ட் காட்சிகளுக்காகவே இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், பிச்சைக்காரன் 2 உருவாக்கும் முயற்சியில் விஜய் ஆண்டனி ஈடுபட்டுள்ளார்.

ஆனால், இப்படத்தை சசி இயக்கவில்லை. மாறாக விஜய் ஆண்டனியே இப்படத்தை இயக்கி வருகிறார்

. இப்படத்தை அவரே தயாரித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.