என்ன "அப்படி" பண்ண சீமான இனி விடவே மாட்டேன்...விஜயலட்சுமியின் ஷாக்கிங் வீடியோ
இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளதாக நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
சீமான் - விஜயலக்ஷ்மி
விஜய் - சூர்யா நடிப்பில் வெளியான "friends" திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை விஜயலக்ஷ்மி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் சில படங்களில் நடித்துள்ளார். சில காலத்தில் நாயகி வேடம் குறைய துவங்கிய நிலையில், அவர் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
அந்த சூழலில், தன்னை காதலித்து திருமண செய்து கொள்வதாக நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றினார் என பரபரப்பு புகாரை அளித்தார். திருமண செய்து கொள்வது கூறி தன்னை சீமான் பாலியல் ரீதியில் பயன்படுத்தி கொண்டதாகவும் பரபரப்பு புகாரை விஜயலக்ஷ்மி முன்வைத்தார்.
சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
இது தொடர்பாக அவர் அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில், நேற்று விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், தான் சீமானுக்கு எதிராக இன்று புகார் கொடுக்க உள்ளதாக குறிப்பிட்டு, அதிமுக ஆட்சியில் சீமானுக்கு எதிராக தான் புகார் கொடுக்க முடியவில்லை என தெரிவித்து தன்னை துடிக்க துடிக்க தொல்லை செய்தனர் என தெரிவித்திருக்கிறார்.
அதிமுக அரசு உதவியுடன் நாம் தமிழர் கட்சியினர் செயல்பட்டனர் என்று பகிரங்காக குற்றம்சாட்டிய விஜயலக்ஷ்மி, மிரட்டல்களை அனைவற்றையும் தாண்டி இன்று மீண்டும் புகார் கொடுக்க இருப்பதாகவும், பெண்களுக்கு ஆதரவாக ஆளும் அரசு இருக்கும் என்று நம்புவதாக கூறி, மக்கள் தனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பெண்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசு எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க போவதாக கூறி, சீமான் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.