சீமானுக்கு ஆதரவாக.. நடிகை விஜயலட்சுமியின் வீடியோ

Seeman
By Fathima Aug 28, 2026 04:57 AM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக இருப்பேன் என புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.

சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக அடுக்கடுக்கான புகார்களை கூறிவந்த நடிகை விஜயலட்சுமி போலிசில் புகார் அளித்திருந்தார், ஆனால் இறுதியில் வழக்கு சமரசம் ஆனது.

இந்நிலையில் தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.

சீமானுக்கு ஆதரவாக.. நடிகை விஜயலட்சுமியின் வீடியோ | Vijayalakshmi Supports Seeman

அதில், சீமானின் வாயை அடைக்க வேண்டுமென்றால் உடனே என் பெயரை கூறுகிறார்கள், கடந்த சில நாட்களாக என்னையும், சீமானையும் இணைத்து கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.

தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும்போது அவர்களை வாழவிட வேண்டும், அது தான் மனிதநேயம்.

ஆனால் தொடர்ந்து என்னையும், அவரையும் பற்றி கொச்சைப்படுத்திக்கொண்டே இருந்தீர்கள் என்றால் நான் அவருக்கு ஆதரவாக நிற்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படி பேசுவதால் ”பெரிய தொகை செட்டில் பண்ணிட்டாங்க போல” என பேச வேண்டாம், என்னை பணம் கொடுத்து யாராலும் வாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12