Election வருது - என்ன வெச்சி சீமான மடக்க பாத்தீங்க..? திடீரென ஆவேசமான விஜயலக்ஷ்மி
காவல் துறையினர் தனது வழக்கில் வேடிக்கை பார்த்து வருகிறது என்று விஜயலக்ஷ்மி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜயலக்ஷ்மி புதிய வீடியோ
திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விஜயலக்ஷ்மி "எனது வழக்கின்போது, ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள், சீமான் அவரின் கட்சியினர் திமிர் பிடித்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி, 12 வருடங்களாக இந்த வழக்கில் நியாயம் கிடைக்காமல் பெண்ணான நான் கதறிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
2011-ஆம் ஆண்டில் எனது வழக்கை வைத்து அஇஅதிமுக சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொண்டது என்ற விஜயலக்ஷ்மி, வரக்கூடிய லோக்சபா தேர்தல் நேரத்தில் எனது வழக்கை எடுத்து சீமானை பாக்கெட்டில் போட்டுக் கொள்ளலாம் என எந்த அரசியல் கட்சியாவது பிளான் வைத்திருந்தால், நான் இப்போதே சொல்லி விடுகிறேன், நான் யாருக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன் என கூறினார்.
என்னிடம் ஆதாரங்களை வாங்கிக்கொண்ட தமிழ்நாடு போலீசார் 12 வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கை போடுவேன் என எச்சரித்த அவர், அன்றைக்குத்தான் சீமான் - விஜயலட்சுமி இடையேயான போரில் ஒரு நியாயம் கிடைக்கும் என்றும் யாரிடமும் இனி தமிழ்நாட்டில் கெஞ்ச மாட்டேன் என்று அதிரடியாக தெரிவித்து ஆனால், நான் இதை விடவே மாட்டேன் என ஆவேசமாகப் பேசியுள்ளார்.