டீ கடையில் நின்றபடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சியின் விஜயலட்சுமி
சென்னை ஆவடி அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயலட்சுமி இருசக்கர வாகனத்தில் சாலை வழியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சியும் அனல் பறக்கும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் ஆவடி தொகுதி வேட்பாளர் விஜயலட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். அந்த வகையில் சென்னை ஆவடி சேக்காடு பகுதியில் வேட்பாளர் விஜயலட்சுமி இருச்சக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
முன்னதாக சேக்காடு பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் தொடங்கிய விஜயலட்சுமி பிரதான சாலை வழியாக பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது டீ கடையில் தேநீர் அருந்தி கொண்டே மக்களின் வாக்கு சேகரித்தார்.