அள்ளிக்கொடுத்த விஜயகுமார் குடும்பத்தார் - சீதனமாக எவ்வளவு கிலோ தங்கம் தெரியுமா..?

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில் அது குறித்து கருத்துக்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
விஜயகுமார் பேத்தி திருமணம்
தமிழ் சினிமாவின் முக்கிய துணை நடிகராக நீண்ட காலமாக குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களை ஏற்றுநடித்துள்ள விஜயகுமாரின் குடும்பத்தில் பலரும் சினிமாவில் பணியாற்றி வருகின்றனர்.
விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகளான தியா விஜயகுமாருக்கு கடந்த திங்கட்கிழமை மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
தொடர்ந்து அவர்களின் திருமணப்படங்களும், திருமணம் குறித்த செய்திகளும் அடுத்துதடுத்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
சீதனமாக...
இந்நிலையில், தான் சீதனமாக எவ்வளவு அளிக்கப்பட்டது என்பது தொடர்பான செய்தியும் வெளிவந்துள்ளது. பயில்வான் ரங்கநாதன், இது குறித்து பேசும் போது, வெளிநாட்டில் மருத்துவம் படித்த விஜயகுமாரின் பேத்தி திருமணம் செய்து கொண்டவரும் டாக்டர் தான் என்றார்.
தாய்மாமன் என்கிற முறையில் நகைகள், சீதனம் என அக்கா மகளுக்கு விஜயகுமார் மற்றும் அருண் விஜய் குடும்பத்தினர் அள்ளி கொடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறினார்.