தொண்டர்களை விஜயகாந்த் சந்திப்பார் - பிரேமலதா தகவல்
Vijayakanth
Chennai
DMDK
By Thahir
விஐயகாந்த் விரைவில் உங்களை சந்திப்பார் என சிவகாசி அருகே நடந்த பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களை விஜயகாந்த் சந்திப்பார்
விருதுநகர் மாவட்டம் விஸ்வநத்தத்தில் தேமுதிக சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொதுமக்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், ”விஜயகாந்த் நலமாக உள்ளார். அவர் விருப்பப்படி இந்த பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழக மக்கள் மற்றும் தொண்டர்களை விஐயகாந்த் விரைவில் சந்திப்பார்” என்றார்.