உங்களுக்கா கேப்டன் இப்படி ஒரு நிலைமை..! கையை கூட உயர்த்த முடியாமல் விஜயகாந்த் அவதி

Tamil Cinema Vijayakanth DMDK
By Thahir Jan 02, 2023 02:51 AM GMT
Report

2023 ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று தேமுதிக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதிரடி நாயகன்

1980 களில் திரைப்படங்கள் என்றாலே அதும் அதிரடி நாயகன் நம்ம கேப்டன் விஜயகாந்த் தான். பெரும்பாலான திரைப்படங்களில் போலீஸ் கெட்டப்பில் வந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த்.

இவர் நடித்த சின்ன கவுண்டர், செந்துார பூவே, சத்ரியன், வைதேகி காத்திருந்தாள், சட்டம் ஒரு இருட்டறை, ஊமை விழிகள், வானத்தைப் போல, சொக்கத் தங்கம், ரமணா, கஜேந்திரா உள்ளிட்ட படங்கள் மட்டுமின்றி ஏராளமான படங்களில் நடித்து அசைக்க முடியாத நடிகராக வலம் வந்தார் விஜயகாந்த்.

நடிப்பில் மட்டும் சொக்கத் தங்கம் இல்லை நேரிலும் தான் என்று மக்கள் சொல்லும் அளவிற்கு தேவை என்று வருவோர்களுக்கு வாரி வாரி வழங்கி வந்தார்.

தமிழக அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்

பின்னர் நடிப்பில் இருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு அரசியலில் குதித்தார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த அவர் தனது கட்சியின் சின்னமாக கொட்டு முரசு -வை பெற்றார்.

அப்போது செல்வாக்கு மிக்க நடிகராக வலம் வந்தது அவருக்கு அரசியலிலும் கை கொடுத்தது. அரசியலில் களம் இறங்கிய நிலையில் அவரின் கட்சியில் ஏராளமான தொண்டர்கள் இணைய தொடங்கினர்.

இதை தொடர்ந்து தமிழக அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவாக சட்டமன்றத்திற்கு நுழைந்தார்.

உங்களுக்கா கேப்டன் இப்படி ஒரு நிலைமை..! கையை கூட உயர்த்த முடியாமல் விஜயகாந்த் அவதி | Vijayakanth Was Unable To Even Raise His Hand

பின்னர் 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது அவரின் தேமுதிக கட்சி. அந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம்  எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்று அசைக்க முடியாத அரசியல் கட்சியாக இருந்தது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சியின் பார்வைகளையும் தனது பக்கம் திருப்பினார்.

பின்னர் அவரின் அதிரடியான கேள்விகள் மற்றும் அநாகரிகமாக நடந்து கொண்ட விதம் அவருக்கு பல கெட்ட பெயர்களை எடுத்து கொடுத்தது.

உடல் நிலை பாதிப்பு 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் நலமுடன் சென்னை திரும்பினார்.

இதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரின் வலது கால் விரல் அகற்றப்பட்டது.

பின்னர் கம்பீரமாக வலம் வந்த விஜயகாந்த் உடல் மெலிந்து நடக்க முடியாமல் சரியாக பேச முடியாமல் வீட்டிற்குள் முடங்கினார். இதையடுத்து அவரை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

தொண்டர்கள் கேப்டனை பார்க்க வேண்டும் அவர் உடல் நிலை எப்படி இருக்கு என கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவவப்போது தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

நடக்க முடியாமல் அவரின் உடல் மெலிந்ததை கண்டு சில தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். இந்த நிலையில் 2023 ஆண்டின் ஆங்கில புத்தாண்டு முதல் தினத்தையொட்டி நேற்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று தொண்டர்களை சந்தித்தார்.

வீல் சேரில் அமர்ந்த படி கேப்டன் விஜயகாந்த் அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்த தொண்டர்களை பார்த்து கைகளை உயர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

உங்களுக்கா கேப்டன் இப்படி ஒரு நிலைமை..! கையை கூட உயர்த்த முடியாமல் விஜயகாந்த் அவதி | Vijayakanth Was Unable To Even Raise His Hand

விஜயகாந்த் உடல் நிலை தேறி பழைய நிலைக்கு வரவேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் மன நிலையாக உள்ளது.