எவ்வளவோ துரோகிகளை பார்த்துட்டோம்.. விஜயகாந்த் இருந்தப்போதே.. பிரேமலதா ஆவேசம்
நாம் எவ்வளவோ துரோகிகளை பார்த்து விட்டோம் என பிரேமலதா ஆவேசமாக பேசியுள்ளார்.
பூத் ஏஜென்ட் கூட்டம்
வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பூத் ஏஜென்ட் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து அதில் பேசிய அவர், தேமுதிக ஆட்சிக்கு வந்தால் மது கடை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். ரேஷன் பொருட்கள் பொதுமக்கள் வீடு தேடி வரும். தேமுதிக நிர்வாகிகள் யார் பெரியவர் என்ற ஈகோவை மறந்து வருகின்ற தேர்தலில் பணியாற்றினால் வெற்றி என்ற மூன்றெழுத்து நமக்கு பரிசாக கிடைக்கும்.
பிரேமலதா ஆவேசம்
இதன் மூலம் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள். விஜயகாந்த் உயிருடன் இருந்தபோது அவரின் முதுகில் குத்தி விட்டனர். கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு பின்னர் இல்லை என்று துரோகம் செய்துவிட்டனர்.
நாம் எவ்வளவோ துரோகிகளை பார்த்து விட்டோம். நமக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சியினர் என்ற எந்தவித ஆதரவும் இல்லை. நீங்கள் விஜயகாந்தை மனதில் வைத்துக் கொண்டு வெற்றிக்காக போராட வேண்டும்.
கடந்த ஒன்றை வருடங்களாக விஜயகாந்த் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து கண்ணீர் வடிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.