தேமுதிக அலுவலுத்தில் மனைவி பிரேமலதாவுடன் இணைந்து தேசிய கொடியை ஏற்றிய விஜயகாந்த்
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலகலம்
இதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள செங்கோட்டையில் காலை பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார். பின்னர் சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி,
எனது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் இந்தியவின் கடைசி குடிமகனும் அரசின் சலுகைகள் சென்று சேர்வது என்பது தான்.அது தான் மகாத்தமா காந்தியின் கனவாக இருந்தது என்று அவர் மேற்கோள் காட்டி பேசினார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின்னர் தேசிய கொடியை ஏற்றினார்.
இதே போன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் மூவர்ண கொடியை ஏற்றினர்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்திற்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்வில் அவரது மனைவி தேசிய கொடியை ஏற்ற உதவி செய்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் பார்த்த தொண்டர்கள் உற்சாகம்.#Vijayakanth #DMDK #IndependenceDay2022 #Chennai@iVijayakant pic.twitter.com/uDD1WaywJH
— Nisanth (@idhaliyan) August 15, 2022